Kondarangi Hills

a Huge Linga

கடவுள் முருகனையே கண்காணிக்க ஒருவரா..? தமிழக விந்திய மலையை பற்றிய திகைப்பூட்டும் தகவல்..!!

விந்திய மலையின் அழகை புகைப்படங்களிலோ, அல்லது வீடியோவிலோ பார்த்து பரவசமாகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அது ஒரு சமயத்தின் சின்னம் என்பதைத் தாண்டி, அதன் பிரம்மாண்டத்தையும், அதன் விருட்ச அழகினையும் யாரும் கண்டவுடன் பரவசமடைவார்கள்.


இதே போல், தமிழ் நாட்டிலும் ஒரு மலை உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்! தென் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கீரனூர் மலை தான் அது! சுற்று வட்டாரத்தில் உள்ள 20 கி.மீ தொலைவில் உள்ள ஊர்களில் இருந்து பார்த்தால் கூட இந்த மலை தனித்துவமாக வித்தியாசமாகத் தெரியும்!

இதன் பெயர் கொண்டலிறங்கி கீரனூர்! கொண்டல் என்றால் மேகம் என்று பொருள்! ஆனால், அது உண்மையான கூற்று தான்! ஏனெனில், வானில் செல்லும் மேகங்கள் அடிக்கடி இந்த மலையின் அழகில் சொக்கிப் போய்த் தொட்டுச் சென்று கொண்டிருக்கின்றன.

பழனி மலையேறும் போது இம்மலை நன்றாக தெரியும் . இமலையில் இருந்து பழனி முருகப் பெருமானையும் தரிசிக்கலாம். இறைவன் இங்கிருந்து முருகரை கடைகண்ணில் பார்த்து கவனித்து கொண்டு தான் உள்ளார்.. போகருக்கும் கொண்ட்றங்கி மலைக்கும் தொடர்பு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இது தனியான மலை. கூம்பு வடிவில், செங்குத்தாக ஓங்கி உயர்ந்து நிற்கும் இந்த மலையை தூரத்தில் இருந்து முழுமையாகப் பார்த்து ரசிக்கலாம். அருகே நெருங்க நெருங்க, அதன் பிரம்மாண்டம், நம்மை அண்ணாந்து பார்க்க வைக்கும். 1500 அடி உயர மலை என்றால் சும்மாவா? இந்த மலையின் உச்சி வரை செல்வதற்கு படிக்கட்டுகளும், மலை உச்சியில் உள்ள குகையில் ஒரு சிவாலயமும் இருக்கிறது என்பது இந்த மலையின் கூடுதல் சிறப்பு!

ஓவ்வொரு பௌர்ணமி நாளிலும், நூற்றுக் கணக்கானவர்கள் மலையேறுவார்கள். அவர்கள் கீழிருந்து மேலே செல்லச் செல்ல மலையின் நடுப்பகுதி வந்ததும், ஒரு சிற்றெரும்பைப் போல் காட்சி அளிப்பார்கள். அதையும் தாண்டி விட்டால், அது ஒரு கானலாகத் தான் காட்சி தரும்!

மேலும் இந்த மலையில் ஏறிச் செல்வது மற்ற மலைகளைப் போல் எளிதானது அல்ல! ஓரளவாவது மலை ஏறியவர்களால் மட்டுமே தாக்குப் பிடித்து ஏற முடியும்! சாதாரணமான ஒரு நபர் இந்த மலையின் படிக்கட்டுகளின் வழியே ஏறிச் செல்ல குறைந்தது 2 மணி நேரமாவது ஆகும்! மேலே சென்று அந்த ஆயாசம் நீங்கவும் சில மணித் துளிகள் ஆகும்!

அதே போல், இறங்கும் போதும், வேகமாக இறங்க முடியாது. மிகக் கவனமாக மெல்ல மெல்லத் தான் இறங்க வேண்டும். ஏனென்றால், இந்த மலைக்கு படிக்கட்டுகள் இருக்கின்றனவேயன்றி, கைப்பிடிச் சுவர்கள் ஏதும் கிடையாது.

எனவே, மலை ஏறுவதும், இறங்குவதும் ரிஸ்க்கான காரியம் தான்! கீழிருந்து உச்சி வரை இந்த மலையின் உயரம் 2 கி.மீ. தூரம் என்றால், படத்தைப் பார்த்து நீங்களே கற்பனை செய்து கொள்ள வேண்டியது தான்! ஆனால், அப்படியும், இந்த மலை மேலே மக்கள் அனுதினமும் ஏறிச் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.
700 ஆண்டுகளுக்கு முன்பாக, கி.பி. 13-ஆம் நூற்றாண்டில், சுந்தரபாண்டிய மன்னனால், இந்த மலைக்கு படிக்கட்டுகள் மலையைச் செதுக்கி உருவாக்கப் பட்டுள்ளன. மலை உச்சிக்குச் சற்றுக் கீழே மலையைக் குடைந்து குடைவரைக் கோயில் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்.

இரண்டு மண்டப அறைகளாக உருவாக்கப் பட்ட இந்தக் குடைவரைக் கோயிலில் மல்லிகார்ச்சுன ஈசுவரர் மூலவராக இருக்கிறார். அவரைத் தரிசிக்கத் தான் இந்தக் கடுமையான மலையேற்றப் பயணம்! ஆனால், இது வரை எந்த வித அசம்பாவிதமும் நடந்ததில்லை என்பது தான் ஆச்சர்யமான விஷயம்!


ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், இந்த மலை உச்சியில் இருந்து தான் ஆங்கிலேயர், சுற்றுப் புறத்தில் உள்ள பகுதிகளை எல்லாம் எளிதாக சர்வே எடுத்திருக்கிறார்கள். அதற்கு அடையாளமாக சர்வே செய்வதற்காக நடப்பட்ட கல் இன்றும் அப்படியே இருக்கிறது. இங்குள்ள குடைவரையில் உள்ள சிவலிங்கம் அருகே குகை போன்று ஒரு இடம் காணக் கிடைக்கிறது!

அங்கு வற்றாத சுனை ஒன்றும் உள்ளது. இது இந்துக் கோயிலாக இருந்தாலும், இங்க நடைபெற வேண்டிய பூஜைகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளை, விருப்பாச்சியில் ஜமீந்தாராக இருந்த குட்டலபாட்ஷா என்ற இஸ்லாமியர் தான் முறைப்படுத்தியுள்ளார்.

பிரம்மாண்டம், ஆன்மீகம், என பல முகங்கள் இந்த கீரனூர் மலைக்கு இருந்தாலும், இன்றும் மலைக்க வைக்கிறது.

Courtesy: https://kkeeranur.com

Temple Worship Timing

Lord Mallikarjuna Swamy Temple is open from

06:00 to 13:00

&

16:00 to 18:00

Temple Highlights

Hill has a steep Conical shape and it is about 1165.86 meters (3825 Feet) high.

A very wonderful Rock cut Temple on the top where Lord Shiva showers his blessings.