சிவன் 108 போற்றி – சிவ மந்திரம்
சிவ பெருமான் தான் தகப்பன் அதாவது முதலாவது தலைவன் என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.
நம்மில் பலர் நவகிரக ஸ்தலங்களுக்கு அதாவது திருநள்ளாறு செல்கின்றோம் என்றால் நேராக சனீஸ்வரன் சன்னதிக்கு சென்று வழிபட்டு அவசர அவசரமாக கிளம்புகின்றனர். அங்குள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் சன்னதிக்கு வண்க்குவதில்லை. சிலர் மட்டுமே வணங்குகின்றனர்.
அதே போல மற்ற நவகிரகங்களுக்கு உகந்த ஆலயங்களுக்கு செல்லும் போது அங்குள்ள மூலவரான சிவபெருமானை முதலில் வணங்கி விட்டு, அம்பாளை வணங்கிவிட்டு தான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும்.
நவகிரகங்களுக்கு மட்டுமல்லாமல், இந்தபிரபஞ்சம் முழுவதற்கும் தகப்பனாக திகழ்பவர் சிவபெருமான்.
சிவபெருமானுக்குரிய 108 சிவன் போற்றி பாடலை தினமும் உச்சரித்து வர சகல செளபாக்கியங்களும் பெற்றிடலாம்.
சிவன் 108 போற்றி
ஓம் அப்பா போற்றி!
ஓம் அரனே போற்றி!
ஓம் அரசே போற்றி!
ஓம் அமுதே போற்றி!
ஓம் அழகே போற்றி!
ஓம் அத்தா போற்றி!
ஓம் பொருளே போற்றி!
ஓம் பொங்கரவா போற்றி!
ஓம் மதிசூடியே போற்றி!
ஓம் மருந்தே போற்றி!
ஓம் மலையே போற்றி!
ஓம் மனமே போற்றி!
ஓம் மணாளா போற்றி!
ஓம் மணியே போற்றி!
ஓம் மெய்யே போற்றி!
ஓம் முகிலே போற்றி!
ஓம் முக்தா போற்றி!
ஓம் முதல்வா போற்றி!
ஓம் வானமே போற்றி!
ஓம் வாழ்வே போற்றி!
ஓம் வையமே போற்றி!
ஓம் விநயனே போற்றி!
ஓம் நாயகனே போற்றி! போற்றி!
ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…
Courtesy: tamil.samayam.com